நிலா நிலா ஓடியாரேன்...
நிற்காமல் ஓடியாரேன்...
சந்திரயான் மீது ஏறி வாரேன்...
பூமியை சுத்தி வேகமா வாரேன்...
பம்பரம் போல் சுத்தி வாரேன்...
பூமிக்கும் நிலவுக்கும் தாவி வாரேன்....
நிற்காமல் நிற்காமல் ஓடி வாரேன்...
சந்திரயான் மீது ஏறி வாரேன்...
மிக்ஸரும் சீயமும் கொண்டு வரேன்...
ராத்திரி பகலா சுத்தி வரேன்...
உன்னோடு விளையாட ஓடியாரேன்...
லேண்டரும் ரோவருவும் எடுத்து வாரேன்..
கல்லையும் மண்ணையும் காண வாரேன்...
பஞ்சு மிட்டாய் எடுத்து வாரேன்...
உனக்கும் கொஞ்சம் பிரிச்சுத் தாரேன்...
சந்திராயன் மீது ஏறி வாரேன்...
நிலா நிலா ஓடி வாரேன்...
நிற்காமல் நிற்காமல் ஓடி வாரேன்...